தெலங்கானா என்கவுன்ட்டர் - என்ன சொல்கிறார்கள் தமிழக பெண் அரசியல்வாதிகள்

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தமிழக பெண் அரசியல்வாதிகளின் கருத்துகளை இங்கே காணலாம்.


நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்காக கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த சூழலில் தெலங்கானா மாநிலத்தில் கடந்த 27ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.