முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள நால்வரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை நிராகரித்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோர் 2017ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனை உத்தரவை எதிர்த்து கடந்த ஆண்டு சீராய்வு மனுத்தாகல் செய்தனர். ஆனால், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்